Tuesday, 20 March 2012

அன்னை மொழி

அகரத்தில்  தான் ஆரம்பித்தேன்
என்  அன்னை  மொழியை !
பள்ளியில்  வள்ளுவன்  வாய்மொழி
கேட்டு  வளர்ந்தேன் !
குற்றியலிகரம் , குற்றியலுகரம்
பகுபத  உறுப்பிலக்கணம்   கற்றேன் !

ஆங்கில  சொல்  ஆளுமை
தெரியாமல்  அலுவலகத்தில்
அசிங்கப்பட்ட  போது நான்
கவலை  கொள்ளவில்லை !

உலக  அரங்கில்  என்  
உடன்பிறப்பு  எல்லா  புகழும்
இறைவனுக்கே  என்ற  போது
உவகை  கொண்டேன்!

அறிவியல்  மேதை  அப்துல்  கலாம்
முதல்  குடிமகனான  போது
பெருமை  தலைக்கேறிவிட்டது !

என்  இன  மக்களை
சிங்களவன்  கொன்று  குவித்த  போது
ரத்த  நாளங்கள்  கொதிப்படைந்தன  !

நவீன  இசை  என்று  ஆத்திசுடியை
பிய்த்து  எறிந்த  போது
முதலில்  ரசித்தாலும்  பின்னர்
கடுப்பாகி  விட்டேன் !

இன்று
நான்  வரைந்த  ஓவியம்
“டாடி”   என்று  அழைக்கும்  போது
சினம்  கொள்ளமுடியாமல்
சிதைந்து   போகிறேன் !

No comments:

Post a Comment