இந்தியாவில் கிரிக்கெட் என்பது உணர்வு பூர்வமான ஒன்று. நவீன கால கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுகளால் ரசனை குறைந்து இருக்கலாம். ஆனால் 1983ல் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு இந்தியாவில் கிரிக்கெட் எல்லா தெருக்களிலும் பிரபலம். என்ன தான் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவது வழக்கம். உலகக் கோப்பையில் இந்திய அணியின் நாக் அவுட் போட்டிகள் பற்றிய பார்வை.
1. 1983 அரை இறுதி - இங்கிலாந்து
மான்செஸ்டர் - வெற்றி
1983 உலகக் கோப்பையில் லீக் சுற்று, அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளோடு இரு முறை மோத வேண்டும் என்று இருந்தது. பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இருந்தது. இந்தியா ஜிம்பாப்வே உடன் இரு வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உடன் ஒரு வெற்றியும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து - 213
க்ரீம் ஃபவுலர் - 33
கிறிஸ் தவரே - 32
கபில்தேவ் - 3/35
இந்தியா - 217/4
யாஷ்பால் ஷர்மா - 61
சந்தீப் பாட்டீல் - 51*
இயான் போத்தம் - 1/40
ஆட்டநாயகன் - மொகந்தீர் அமர்நாத்
2. 1983 இறுதிப் போட்டி - வெஸ்ட் இண்டீஸ்
லார்ட்ஸ் - வெற்றி
கத்துத்குட்டி அணி இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்ததால், கத்துக்குட்டியாகவே நினைத்து விளையாடியது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இன்றைய கிரிக்கெட் 183 ஒரு வீரரே அடிக்கும் ரன். அதை வைத்து கொண்டு இந்தியா சமாளித்தது வெற்றியும் பெற்றது.
இந்தியா - 183
ஸ்ரீகாந்த் - 38
சந்தீப் பாட்டீல் - 27
ஆன்டி ராபர்ட்ஸ் - 3/32
வெஸ்ட் இண்டீஸ் - 140
விவியன் ரிச்சர்ட்ஸ் -33
டூஜான் - 25
மதன்லால் - 3/31
ஆட்டநாயகன் - மொகந்தீர் அமர்நாத்
3. 1987 அரை இறுதி - இங்கிலாந்து
மும்பை - தோல்வி
1983 உலகக் கோப்பை போல 1987லிலும் லீக் சுற்று, அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளோடு இரு முறை மோத வேண்டும் என்று இருந்தது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இருந்தது. இந்தியா ஜிம்பாப்வே, நியூசிலாந்து உடன் இரு வெற்றியும், ஆஸ்திரேலியா உடன் ஒரு வெற்றியும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பையை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தியது.
நாக்அவுட்டில் சேசிங் இந்திய அணியின் பலவீனம் என்று தொடங்கி வைத்த நாக் அவுட்
இங்கிலாந்து - 254/6
கிரகாம் கூச் - 115
மைக் கட்டிங் - 56
மன்னிந்தர் சிங் - 3/54
இந்தியா -219
முகமது அசாருதீன் - 64
ஸ்ரீகாந்த் - 31
ஹெம்மிங்கஸ் - 4/52
ஆட்டநாயகன் - கிரகாம் கூச்
4. 1996 காலிறுதி - பாகிஸ்தான்
பெங்களூரு - வெற்றி
மீண்டும் உலகக் கோப்பை இந்தியாவில், முதல் பேட்டிங் பிடித்து காலிறுதியில் வென்றது இந்தியா. அமீர் சோகைல் ஹீரோயிசம் காட்ட, வெங்கடேஷ் பிரசாத் தான் லோக்கல் ஆளு என்று நிரூபித்தார்.
இந்தியா - 287/8
சித்து - 93
அஜய் ஜடேஜா - 45
முஸ்டக் அகமது - 2/56
பாகிஸ்தான் - 248/9
அமீர் சோகைல் - 55
சயீத் அன்வர் - 48
பிரசாத் - 3/45
ஆட்டநாயகன் - நவ்ஜோத் சித்து
5. 1996 அரை இறுதி - இலங்கை
கொல்கத்தா - தோல்வி
சேசிங்ல் யாரும் பெரிய அளவில் ஆடாமல் போக, ரசிகர்கள் கொத்தளிக்க ஆட்டம் கைவிடப்பட்டது. இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை - 251/8
டி சில்வா -66
மகானமா- 58
ஸ்ரீநாத் - 3/34
இந்தியா - 120/8
சச்சின் - 65
மஞ்சரேக்கர் - 25
ஜெயசூர்யா - 3/12
ஆட்டநாயகன் - அரவிந்த டி சில்வா
6. 2003 அரை இறுதி - கென்யா
டர்பன் - வெற்றி
சூப்பர் 8ல் கென்யா மற்றும் நியூசிலாந்தை கஷ்டப்பட்டு சேஸ் செய்து அரை இறுதிக்கு வந்தது. அரை இறுதியில் கென்யா தான் என்றாலும் முதல் பேட்டிங் தான் தேர்வு செய்தது.
இந்தியா - 270/4
கங்குலி - 111
சச்சின் - 83
தாமஸ் ஒடோயோ - 1/45
கென்யா - 179
ஸ்டீவ் டிக்கோலோ - 56
காலின்ஸ் ஒபுயா - 29
ஜாகீர் கான் - 3/14
ஆட்ட நாயகன் - கங்குலி
7. 2003 இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா
ஜோகன்னஸ்பர்க் - தோல்வி
சச்சினின் எழுச்சிக்கு பின் இந்திய அணி பேட்டிங்ல் வலுவான அணி என்று பேசப்பட்டது ஆனால் உண்மை அதுவல்ல. எவ்வளவு ரன் அடித்திருந்தாலும் இந்திய பவுலர் எதிரணியை எளிதில் சேஸ் செய்ய விடுவதில்லை நாக் அவுட்டில். பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா சேசிங்ல் சொதப்பும்.
360 என்ற கடின இலக்கை துரத்தியது இந்தியா. எப்போதும் நான் ஸ்ட்ரைக்கராக இறங்கும் சச்சின் ஸ்ட்ரைக்கராகி முதல் ஓவரில் அவுட்டாக முற்றிலும் கோணலாக்கியது. டாஸ் வென்று கங்குலி பீல்டிங் தேர்வு செய்தார். பிட்ச் ரிப்போர்ட் அடிப்படையில்.
ஆஸ்திரேலியா - 359/2
பாண்டிங் - 140*
மார்ட்டின் - 88*
ஹர்பஜன் - 2/49
இந்தியா - 234
சேவாக் - 82
டிராவிட் - 47
மெக்ராத் - 3/52
ஆட்டநாயகன் - ரிக்கி பாண்டிங்
8. 2011 காலிறுதி - ஆஸ்திரேலியா
அகமதாபாத் - வெற்றி
நாக் அவுட்டில் ஒரு சேசிங்கை எளிதாக மாற்றிய கதாநாயகன் யுவராஜ் சிங். அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்தது சிறப்பான சம்பவம். ரெய்னா - யுவராஜ் பார்ட்னெர்ஷிப் குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலியா - 260/6
பாண்டிங் - 104
ஹாடின் - 53
யுவராஜ் - 2/44
இந்தியா - 261/5
யுவராஜ் - 57
சச்சின் - 53
டேவிட் ஹசி - 1/19
ஆட்டநாயகன் - யுவராஜ்
9. 2011 அரை இறுதி - பாகிஸ்தான்
மொகாலி - வெற்றி
அரை இறுதியில் பாகிஸ்தானோடு மோதியது. பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்றதில்லை என்ற அழுத்தத்தில் விளையாடியது. இந்திய பந்து வீச்சாளர்கள் 5 பேரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்தியா - 260/9
சச்சின் - 85
சேவாக் - 38
வகாப் ரியாஸ் - 5/46
பாகிஸ்தான் - 231
மிஸ்பா -56
ஹபீஸ் - 44
நெக்ரா - 2/33
ஆட்டநாயகன் - சச்சின்
10. 2011 இறுதிப் போட்டி - இலங்கை
மும்பை - வெற்றி
இறுதிப் போட்டியில் மீண்டும் சேஸ், சேவாக், சச்சின் சீக்கிரம் அவுட் ஆக, கம்பீர் நங்கூரத்தை போட்டார். கோலி அவுட்டானதும் களத்திற்கு வந்தார் கேப்டன் தோனி. கம்பீர் - தோனி பார்ட்னர்ஷிப் சேசிங்கை எளிதாக்கியது. யுவராஜ் இன்னும் களம் இறங்கவில்லை என்ற நிலை நல்ல தன்னம்பிக்கை கொடுத்திருக்கும்.
இலங்கை 274/6
ஜெயவர்தனே- 103*
சங்கக்காரா - 48
யுவராஜ் - 2/49
இந்தியா - 277/4
கம்பீர் - 97
தோனி - 91*
ஆட்டநாயகன் - தோனி
11. 2015 காலிறுதி - பங்களாதேஷ்
மெல்போர்ன் - வெற்றி
லீக் போட்டி அனைத்தையும் வென்று இந்தியா காலிறுதிக்கு சென்றது. காலிறுதியில் கத்துத்குட்டி பங்களாதேஷ், ரோகித் வெற்றியை எளிதாக்கினார்.
இந்தியா - 302/6
ரோகித் - 137
ரெய்னா - 65
தஸ்கின் அகமது - 3/69
பங்களாதேஷ் - 193
நசீர் ஹோசைன் - 35
ஷபீர் ரஹ்மான் - 30
உமேஷ் - 4/31
ஆட்டநாயகன் - ரோகித் சர்மா
12. 2015 அரை இறுதி - ஆஸ்திரேலியா
சிட்னி - தோல்வி
மீண்டும் நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவில் வைத்து. தோனியை தவிர யாரும் அரைசதம் அடிக்கவில்லை. வழக்கமான சேசிங் அழுத்ததால் பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை. கடின இலக்கு என்றாலும் நாக் அவுட் என்ற அழுத்ததால் தான் இந்தியா கோட்டை விட்டது.
ஆஸ்திரேலியா - 328/7
ஸ்மித் - 105
பிஞ்ச் - 81
உமேஷ் யாதவ் 4/72
இந்தியா 233
எம் எஸ் தோனி - 65
தவான் -45
பல்க்னர் - 3/59
ஆட்டநாயகன் - ஸ்மித்
13. 2019 அரை இறுதி - நியூசிலாந்து
மான்செஸ்டர் - தோல்வி
குறைந்த இலக்கை சேஸ் செய்தது இந்தியா. முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலாஒரு ரன் மட்டுமே எடுத்தனர்.
தோனி கடைசி ஓவர் வரை இழுக்கும் தனது டெக்னிக்கை உபயோக படுத்தினார். ஆனால் ஐபிஎல் போல் கடைசிகட்ட ஓவர் பதான், அக்சர், சைனி போன்றோர் பந்து வீசவில்லை.
நியூசிலாந்து 239/8
ரோஸ் டெய்லர் 74
வில்லியம்சன் 67
புவனேஸ்வர் 3/43
இந்தியா 221
ரவீந்திர ஜடேஜா 77
எம் எஸ் தோனி 50
ஹென்றி 3/37
ஆட்டநாயகன் - ஹென்றி
2023
நாக் அவுட்டில் முதல் பேட்டிங் செய்வது நல்லது. பனிப்பொழிவு பற்றி யோசிக்க தேவையில்லை. அப்படியே சேசிவ் வந்தாலும் ரோகித், கோலி கையில் ஆட்டம் இருக்க வேண்டும். ஹில், ஸ்ரேயாஸ் அனுபவமில்லாதவர்கள். பாண்ட்யா, ஜடேஜா சேசிங்கிற்கு செட்டாக மாட்டார்கள். ராகுல் யுவராஜ் போல நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment