கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விளையாட்டு, பேட்ஸ்மேன்கள் பேட்டிங் மட்டும் செய்தால் போதும். ஆனால் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை தேவைப்பட்டால் பேட்டிங்க்கும் செய்ய வேண்டியது கட்டாயம்.
பந்துவீச்சாளர்களுக்கு அங்கீகாரம் மிக மிக குறைவே. ஆட்டநாயகன் விருது மிக அரிது. உலகக் கோப்பையில் ஒவ்வொரு ஆண்டும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்.
1975 - கேரி ஹில்மோர் (ஆஸ்திரேலியா) - 11
முதல் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கேரி ஹில்மோர். அரை இறுதி போட்டியில் 6 விக்கெட்டும், இறுதி போட்டியில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014ல் காலமானார்.
1979 - மைக் ஹெண்ட்ரிக் (இங்கிலாந்து) -10
1979ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இங்கிலாந்து நாட்டின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹெண்ட்ரிக். பாகிஸ்தான் அணியுடான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.
இவர் 2021ல் காலமானார்.
1983 - ரோஜர் பின்னி (இந்தியா) -18
83ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. இவர் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலியா உடனான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். இவர் தான் முதல் அதிக விக்கெட் வீழ்த்திய, உலகக் கோப்பை வென்ற அணியை சார்ந்தவர்.
1987 - கிரேக் மெக்டெர்மாட் (ஆஸ்திரேலியா) -18
87ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மெக்டெர்மாட்.
அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். இந்தியா உடனான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
1992 - வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) -18
1992ல் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.
1996 - அனில் கும்ளே (இந்தியா) -15
ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இடம் பெற்ற முதல் சுழற்பந்து வீச்சாளர் கும்ளே.
இந்திய லெக் ஸ்பின்னரான கும்ளே ஒரு போட்டியில் கூட 4 விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால் கென்யா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
1999 - ஜெப் அல்லாட் (நியூசிலாந்து) & ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 20
99 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெப் அல்லாட் தான் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னரான வார்னேவுக்கு 4 விக்கெட் தாரை வார்த்து கொடுக்க, வார்னேவும் 20 விக்கெட் வீழ்த்தி முதலிடத்திற்கு வந்தார்.
அல்லாட்
எதிர் ஆஸ்திரேலியா - 4/37
எதிர் பாகிஸ்தான் - 4/64
வார்ன்
எதிர் தென்னாப்பிரிக்கா (அரை இறுதி)- 4/29 - ஆட்டநாயகன்
எதிர் பாகிஸ்தான் (இறுதிப் போட்டி)- 4/33 - ஆட்டநாயகன்
2003 - சமீந்தா வாஸ் ( இலங்கை) - 23
2003ல் இலங்கையின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பங்களாதேஷ்க்கு எதிரான லீக் போட்டியில் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் எடுத்த போட்டி அது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார் வாஸ்.
2007 - கிளன் மெக்ராத் (ஆஸ்திரேலியா ) - 26
2007ல் ஆஸ்திரேலிய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
4 உலகக் கோப்பைகளுக்கு(1987) பின் ஒரு வலதுகை வேகப்பந்து வீச்சாளர் விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் வந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர் பங்களாதேஷ் - 3/16 - ஆட்டநாயகன்
எதிர் அயர்லாந்து - 3/17 - ஆட்டநாயகன்
எதிர் தென்னாப்பிரிக்கா (அரைஇறுதி) - 3/18 - ஆட்டநாயகன்
2011 - ஜாகீர் கான் (இந்தியா) & சாகித் அப்ரிடி (பாகிஸ்தான்) - 21
2011ல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரடியும் தலா 21 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஜாகீர் கான்
எதிர் இங்கிலாந்து - 3/64
எதிர் நெதர்லாந்து - 3/20
அப்ரிடி
எதிர் கென்யா - 5/16
எதிர் இலங்கை - 4/34 - ஆட்டநாயகன்
எதிர் கனடா - 5/23 - ஆட்டநாயகன்
எதிர் வெஸ்ட் இண்டீஸ் - 4/30
2015 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) & டிரன்ட் பவுல்ட் ( நியூசிலாந்து) -22
2015 உலகக் கோப்பையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் ட்ரன்ட் பவுல்ட் தலா 22 விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து லீக் போட்டியில் ஸ்டார்க் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பவுல்ட் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.
ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார் ஸ்டார்க்.
2019 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) -27
2019ல் மிட்செல் ஸ்டார்க்கே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் ஒருமுறை கூட ஆட்டநாயகன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment