5 பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்கள், 5 ஆல்ரவுண்டர் என்று சிறப்பான அணி.
1. கனே வில்லியம்சன்
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஐபில் போட்டியில் காயம் காரணமாக விலகியவர்.தற்போது மீண்டு வந்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். ஆனாலும் முழு உடற்தகுதி பெற்றாரா என்று தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் லாத்தமே அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இவர் அணியில் இருந்தால் அணிக்கு பலம்.
2. டிவோன் கான்வே
இடதுகை துவக்க ஆட்டக்காரர். ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம் கை கொடுக்கும். சமீபத்திய மோசமான பார்ம், தான் கவலை. பேக்அப் விக்கெட் கீப்பர்.
இவர் பிறந்த நாடு - தென்னாப்பிரிக்கா
3. க்ளன் பிலிப்ஸ்
அதிரடி ஆட்டக்காரர். துவக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு. பேட்டிங், பவுலிங், கீப்பிங் என எல்லாம் செய்யக்கூடிய வீரர்.
இவர் பிறந்த நாடு - தென்னாப்பிரிக்கா
4. டாம் லாத்தம்
இடதுகை பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர். வில்லியம்சனுக்கு பிறகு ஸ்பின் பவுலிங்கை லாவகமாக ஆடும் வீரர். அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும்.
5. டேரல் மிட்செல்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் மித வேகப் பந்து வீச்சாளர். பொறுப்பாக ஆட வேண்டிய இடத்தில் ஆடப்போகிறார். சமாளிப்பாரா என்று தெரியவில்லை.
6. ஜேம்ஸ் நீஸம்
இவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், மிதவேகப் பந்து வீச்சாளர். நல்ல ஆல்ரவுண்டர். இந்திய களங்கள் சவாலானவை.
7. மிட்செல் சாண்ட்னர்
இடதுகை சுழற்பந்து வீச்சாளர், சுமாரான பேட்ஸ்மேனும் கூட. பவர்ப்ளேவில் கூட பந்து வீச அழைக்கலாம். தன்னம்பிக்கையோடு பந்து வீசுபவர்.ஐபிஎல் அனுபவம் கை கொடுக்கும். (ஆனால் ஐபிஎல்ல் அதிகம் பெஞ்சில் இருந்துள்ளார்)
8. இஷ் சோதி
வலதுகை லெக் ஸ்பின்னர். ஸ்பின் எடுத்தால் இவர் கொடி பறக்கும். பனிப்பொழிவு எதிரியாக அமையும்.
இவர் பிறந்த நாடு - இந்தியா
9. மாட் ஹென்றி
வேகப்பந்து வீச்சாளர், காயத்தில் இருந்து சவுதி மீளாததால் அணியில் இருப்பார். பவுல்ட்டை பின்பற்றி சென்றால் போதும்.
10. லோக்கி பெர்குசன்
வேகப்பந்து வீச்சாளர். இவரது வேகம் சில நேரங்களில் கை கொடுக்கும், சில நேரங்களில் காலை வாரும். கடைசி கட்ட ஓவர்களை சமாளிக்க வேண்டும்.
11. ரச்சின் ரவீந்திரா
அணியில் இளம் வீரர். பேட்டிங் ஆல்ரவுண்டர், அணியில் இடம் பெறுவது கடினம்.
12. வில் யங்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அனுபவமில்லாத வீரர்.
13. மார்க் சாப்மேன்
நல்ல ஆல்ரவுண்டர், இந்திய ஆடுகளங்கள் நிச்சயம் கை கொடுக்கும். இடதுகை ஸ்பின்னர். இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.
இவர் பிறந்த நாடு - ஹாங்காங். ஹாங்காங் அணிக்காக சில போட்டிகளில் ஆடியவர்.
14. டிம் சவுதி
காயத்தில் இருந்து மீளவில்லை. மீண்டு வந்தாலும் இவரது தாக்கம் பெரிதாக இருக்காது.
15.டிரண்ட் பவுல்ட்
வேகப்பந்து வீச்சை வழி நடத்தும் வீரர். எந்த சூழலிலும் பந்து வீசும் திறன் படைத்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் அனுபவம் உள்ளது. பீல்டிங்கில் இவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
No comments:
Post a Comment