Sunday, 1 October 2023

பாகிஸ்தான் அணி 2023

1. பாபர் அசாம்

கேப்டனாக பொறுப்பு ஏற்ற பிறகு அதிகம் ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடி வருகிறார். நிலையாக ரன் குவிக்கிறார்.

கேப்டன்சியை பொறுத்தவரை கடிவாளம் போட்ட குதிரையாக இருக்கிறார். அந்த அணுகுமுறையை மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பந்து வீச்சாளரை மாற்றும் போது. சீனியர்கள் யாரும் இல்லாததால் ஒற்றை தலைமை என்பது பெரிய ஆறுதல்.

2. பக்கர் ஸமான்

இடது கை துவக்க ஆட்டக்காரர். 18 இன்னிங்ஸ்ல் 1000 ரன்னை கடந்து உலக சாதனை படைத்தவர். கடந்த பத்து போட்டிகளில் பெரிதாக சாதிக்கவில்லை.

3. இமாம் உல் ஹக்

மற்றொரு இடதுகை துவக்க ஆட்டக்காரர். கண்ணாடி அணிந்து ஆடக்கூடிய வீரர். நல்ல துவக்கம் கொடுக்க கூடிய ஒரு வீரர். ஸமானின் சொதப்பல்களையும் சரிக்கட்ட வேண்டிய கட்டாயச் சூழல்.

4. முகமது ரிஸ்வான்

பொறுமையாக ஆடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தும் திறமையுள்ள வீரர். துவக்க ஆட்டக்காரராக இருந்தவரை மிடில் ஆர்டருக்கு மாற்றி விட்டனர். துவக்க ஆட்டக்காரர் சொதப்பினாலும் மாற்றாமல் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் என்பதால் மிடில் ஆர்டர் பேட்டிங் பணிச்சுமையை குறைக்கும்.

ஒரு காலத்தில் ரிஸ்வான் அப்பீலை பார்த்து பேட்டில் பட்டிருக்குமோ என்று அம்பயர்கள் சந்தேகப்பட்டனர். இப்போதெல்லாம் இவன் சும்மா கத்திக்கிட்டு இருப்பான் என்று அம்பயர்கள் கண்டுகொள்வதில்லை. அந்தளவுக்கு ஓவர் அப்பீல்.

5. இப்திகார் அகமது

அதிரடியாக ஆடுவார் என்பதற்காகவே ஜூனியர்களை ஓரங்கட்டி விட்டு இவரை அணியில் வைத்துள்ளனர். பகுதி நேர பந்து வீச்சாளர் என்பது கூடுதல் தகுதி.

6. சவுத் ஷகில்

இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். 6 ஒருநாள் போட்டிகளே ஆடியுள்ளார். எதிரணியில் லெக் ஸ்பின்னர்கள் மட்டுமே இருந்தால் இவர் அணியில் இடம்பெற வாய்ப்பு.

7. அகா சல்மான்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஆப் ஸ்பின்னர். அனுபவமில்லாத வீரர்.

8. சதாப்கான்

லெக் ஸ்பின்னர், ஆல்ரவுண்டர். வேகப்பந்து வீச்சாளர் நன்றாக போட்டால் அப்படியே இவரது பந்துவீச்சை ஓட்டிவிடுவார். வேகப்பந்து வீச்சாளர்கள் அடி வாங்கினால் இவரது பந்துவீச்சுக்கு சத்திய சோதனை.

9. முகமது நவாஸ்

இன்னொரு ஆல்ரவுண்டர். இடதுகை பேட்ஸ்மேன். இடதுகை ஸ்பின்னர். அணியில் மாற்றம் வேண்டும் என்றால் இவரை நீக்குவது தான் முதல் சாய்ஸ். அந்த அளவுக்கு இவரது பங்களிப்பு உள்ளது.

10. உசாமா மிர்

இன்னொரு லெக் ஸ்பின்னர். சதாப் இருப்பதால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிது.

11. ஷாகின் அப்ரிடி

இடதுகை வேகப்பந்து வீச்சாளர். பந்தை ஸ்விங் செய்வதிலும் வல்லவர். இவருக்கு இப்போது சுமை அதிகம். இவரது பந்து வீச்சை அடித்தால் மொத்த அணியின் பந்துவீச்சும் வீழ்ந்துவிடும்.

12. ஹசன் அலி

நசீம் ஷாவுக்கு பதிலாக இடம் பெற்றுள்ளார். எப்படி இடம் கிடைத்தது என்பது கேள்விக்குறியே. சீனியர் என்பதால் கிடைத்திருக்கலாம். அப்ரிடி பந்துவீச்சை அடிக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும் இவரது பந்துவீச்சை பொளப்பார்கள்.

13. ஹரிஸ் ரப்

வலதுகை வேகப்பந்து வீச்சாளர். என்ன நடந்தாலும் 9வது ஓவர் இவரை பந்துவீச கேப்டன் அழைப்பார். நிலைமைக்கு தகுந்தவாறு பந்து வீச வேண்டும்.

14. முகமது வாசிம்

பவுலிங் ஆல்ரவுண்டர். நாலாவது வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் அணியில் இருப்பார். 

15. அப்துல்லா ஷபீக்

வலதுகை துவக்க ஆட்டக்காரர். அணியில் சீனியர்கள் இருப்பதால் வாய்ப்பு கிடைப்பது கடினம். இவர் துவக்க வீரராக களம் இறங்கினால் இடது கை வலது கை துவக்க ஆட்டக்காரர் காம்பினேஷன் கிடைக்கும்.

4-5 ஒருநாள் போட்டிகளே ஆடியுள்ளார்.

      இந்திய காலநிலை பாகிஸ்தான் வீரர்களுக்கு பழகிய காலநிலை தான். ஆனால் இந்திய ஆடுகளங்கள் பழக்கம் இல்லாதவை. பாகிஸ்தான் ஆடுகளங்கள் போல் ப்ளாட்டும் கிடையாது, ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் போல் ஸ்விங்காகும் ஆடுகளங்களும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வேகப்பந்து வீச்சாளர் என்று மார்தட்டிக் கொண்டார்கள். இப்போது நசீம் ஷா இல்லை என்பது பெரும் பின்னடைவு.


No comments:

Post a Comment