Sunday, 30 July 2023

இரட்டை பனைமரங்கள்

மூன்றாம் வகுப்பு வரை
பள்ளி செல்லும் பாதையில்
இருந்தது இரட்டை பனைமரங்கள் !

வண்டி தடமாக இருக்கும்
பாதை இரட்டை பனைமரங்களை
தாண்டியும்
அடர்ந்த காடுபோல் மாறி
பிறகு ஒத்தையடி 
பாதையாக மாறும் !

இரட்டை பனைமரங்களில்
முனி இருப்பதாக
சொல்வார்கள் !
தனியாக செல்லும் போது
பயத்துடனே கடப்பேன்
பனைமரங்களை !

இரட்டை பனைமரங்களில்
ஒன்றை வெட்டிய பின்
முனி இல்லை என்பது
உறுதியானது !

வரும் போது
பனை மரத்தை கடந்தால்
வீடு தெரியும்
மனதில் பயமும் விலகும் !

ஒற்றை பனையும்
வெட்டப்பட்ட நாளில்
பாதை வெறுமையாக
இருந்தது !

பனை மரங்கள் இருந்த
இடத்தில் தற்போது
போடப்பட்டுள்ள சாலையின்
நிறம் பனைமரங்களின்
நிறமாக நிற்கிறது !!!

No comments:

Post a Comment