Friday, 14 July 2023

ஐயர் வீடு

1. ஐயர் வீடு

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
சக்கிலியன் சென்று
வந்தான் வெள்ளை அடிக்க !

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
பறையன் சென்று
வந்தான் அரிசி
மூட்டைகளை அடுக்க !

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
நாடான் சென்று வந்தான்
கருப்பட்டி சிப்பத்தை
வைக்க !

அடி வயிற்றில் வலியோடு
துடித்தாலும்
மாதம் ஒருமுறை
வீட்டிற்குள் செல்ல
முடியவில்லை
ஐயர் வீட்டு
பெண்களால் !!!

2. செல்லாத பணம்

கருப்பு பணத்தை
ஒழிக்க வந்தது
இளஞ்சிவப்பு நிற
இரண்டாயிரம் ரூபாய் !

சுயமி எடுத்த கொண்ட
பின் சில்லறை கிடைக்கமால்
தவிக்க விட்டது !

சாமானியன் மறந்து
விட்ட இல்லாத பணம்
செல்லாத பணம் ஆகிறது
செப்டம்பர் முதல் !!!

3. பெரியார் வழி

உத்தரப் பிரதேசத்தில்
சாதி வெறி என்று எழுதிக் 
கொண்டே
தமிழ் சினிமாவை விமர்சனம்
செய்கிறான் சுய சாதி
சார்ந்து !

மணிப்பூரில் மதக் கலவரம்
என்று எழுதி கொண்டே
வெளிநாட்டு கிரிக்கெட்
வீரரின் விளையாட்டு திறமையை
சிலாகிக்கிறான்
தன் மதம் சார்ந்து !

பெயருக்கு பின்னால் சாதி
போடுவதில்லை என்று
பெருமிதமாக கூறி
கொண்டே
சமத்துவ புரங்கள்
ஊருக்கு ஒதுக்கு புறமாக
கட்டப்பட்ட அரசியல்
தெரியாமல் இருக்கிறான் !

பெரியார் வழியில்
பயணிக்கும் ஒருவன் !!!

4. மதுக்கடை

காலை ஏழு மணிக்கே
மதுக்கடை திறப்பது
பற்றி யோசிப்பதாக
சொல்கிறார்
மதுவிலக்கு துறை
அமைச்சர் !

நீட் தேர்வு பற்றி
பேச நேரமில்லை
பள்ளி கல்வித்துறை
அமைச்சருக்கு !

கிரிக்கெட் மைதானத்திற்கு
சிறுவர்களை அழைத்து
செல்லும் பணியை 
சிறப்பாக செய்கிறார்
விளையாட்டு துறை
அமைச்சர் !

பால் பாக்கெட்
வண்ணத்தை மாற்றி
சத்தமில்லாமல் விலை
ஏற்றிவிட்டார்
பால்வளத்துறை !

வருமானம் பற்றி
தரவு இல்லை என்று
தெரிந்தாலும்
அதில் முறைகேடுகள்
நிச்சயம் நடக்கும்
என்றாலும்
வருமானத்தின் அடிப்படையில்
மகளிர் உதவித்தொகை
என்கிறார் முதல்வர் !!!


No comments:

Post a Comment