பால்யத்தில் பாளையங்கோட்டையின்
வாசலை திறந்தது மாமாதான்!
மிதிவண்டியில் மூவராய்
செல்ல ஆசைப்படும்
சுரேஷ் அண்ணனால்
சிவன் கோயிலும்
கொத்து கொத்தாய்
தொங்கும் வௌவால்களை
காண ஆசைப்படும்
கணேஷால்
கோபாலசாமி கோயிலும்
மனைவி மனோவால்
மேல வாசல் முருகன்
கோயிலும் அறிமுகம்
ஆகியது!
ஆறாம் வகுப்பில்
வாசலை திறந்தது மாமாதான்!
மிதிவண்டியில் மூவராய்
செல்ல ஆசைப்படும்
சுரேஷ் அண்ணனால்
சிவன் கோயிலும்
கொத்து கொத்தாய்
தொங்கும் வௌவால்களை
காண ஆசைப்படும்
கணேஷால்
கோபாலசாமி கோயிலும்
மனைவி மனோவால்
மேல வாசல் முருகன்
கோயிலும் அறிமுகம்
ஆகியது!
ஆறாம் வகுப்பில்
தெற்கு பஜார் வழியே
பள்ளி செல்லும் போது
காலையில் கணத்த
இதயமாய் இருக்கும்
மாலையில் மகிழ்ச்சியாய்
இருக்கும்!
முருகன் குறிச்சியில்
வாய்கால் குளியல்,
தூண்டில் மீன்பிடிப்பு,
நவ்வாபழப் பறிப்பு
எல்லாவற்றிலும்
நான் கூட இருந்த குமார்!
விடுதிக்கு சென்றபின்
வாரவாரம் கிடைக்கும்
மூணு மணி நேரமும்
பாளையங்கோட்டையை
சுற்றுவதே பொழுதுபோக்கு!
வேல் முருகனுடன்
ரோகினி டீ ஸ்டால்
சிங், பிரசாத்துடன்
ரோட்டோர போளிக்கடை
கண்ணாவுடன் செந்தில்வேல்
தியேட்டர்
வேதியியல் ட்யூசன்
சமாதானபுரம்
கணிப்பொறியியல்
ட்யூசன் தெற்குபஜார்
என அழகான நாட்களை
தந்தது பாளையங்கோட்டை
கடைசியாக என்
செல்லமகள் பிறந்ததும்
பாளையங்கோட்டை
ஆஸ்பத்திரியில் தான்!!!
No comments:
Post a Comment