Friday, 17 April 2020

ரயில் பயண கவிதை


நான் மேலிருக்கையில்
போய் அமர்ந்த போது
கீழிருக்கையில் எதிரே
வந்தமர்ந்தாள்
அந்த அழகு தேவதை.

நெற்றியில் தவழும் முடியை ஒதுக்கி கொண்டே
அலைபேசியில் ஏதோ
பார்த்து கொண்டிருந்தாள்.
எனது அலைபேசியிலும்
புதுப்படம் இருந்தது.
புதுக்கவிதையை தான்
பார்த்து கொண்டிருந்தேன்

அவளுக்கான நடு இருக்கையை
மாட்டிய பின்பு
தலைமுடியை நன்றாய்
கட்டிவிட்டு இருக்கையில்
ஏறினாள்.
வலைதளத்தை பார்க்க
துவக்கையில்
மேல்தளத்தில் இரு கண்கள் பார்ப்பதை
கவனித்தவளின்
கண்களில் வெட்கம்
தெரிந்தது.
இரவு விளக்கொளியில்
பார்த்தேன்
ஒரு குழந்தை போல்
தூங்கி கொண்டிருந்தாள்.

காலையில் நான் கண்
விழித்த போது
கவிதையை காணவில்லை.
அதிகாலையில் அவள் இறங்கி சென்றிருப்பாள்.
அவள் எனக்கு முகவரியோ
அலைபேசி எண்ணோ
தரவில்லை.
அழகான கவிதையை
தந்து சென்றாள்!!!

No comments:

Post a Comment