Wednesday, 18 December 2019

சாய் சுவாசிகா - அகவை 2

எங்கள் இல்லத்தில்
இன்பத்தை விதைத்தவள்.

அவள் தூங்கும் நேரத்தில்
பொம்மைகளோடு
இல்லமும் இளைப்பாறிக் கொள்கிறது.

எங்கள் எல்லா திட்டமிடல்களுக்கு
மையப்புள்ளி அவள்.

எத்தனை  சேட்டை
செய்தாலும் அவளை திட்ட
மனம் ஒப்புவதில்லை.

மாநகரில் மாட்டிக்கொண்டு
அதிகம் வெளியுலகை
பாத்திராதவள் அவள்.

அவள் மட்டுமே
எங்கள் உலகம்!!!

No comments:

Post a Comment