25 ஆண்டுகளை கடந்து விட்ட சன்டிவி பற்றிய பார்வை.
90களில் உங்க வீட்டில் சன்டிவி இருக்கா என்று விழி விரிய கேட்பார்கள். கேபிள் கனெக்சன் என்ற சொல் அவ்வளவு பரிச்சயம் இல்லை. அப்போதய சன்டிவியின் போட்டியாளர் ராஜ்டிவி. ராஜ் டிவியை தற்போது சிபிசிஐடி வைத்து தேட வேண்டியுள்ளது.
96ல் சொத்துக் குவிப்பு காட்சிகளை காட்டிய போது சன்டிவி செய்தி தரமானது என பேசப்பட்டது. கைக்கடிகாரங்களில் சன்டிவி நேரத்தை பதிவு செய்து கொண்டார்கள் மக்கள். வானொலி நேரம் வழக்கொழிந்து போனது.
சின்ன சின்ன தொடர்கள் பார்த்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் சித்திதான் முதல் நெடுந்தொடர்.
சித்தியின் தாக்கத்தால் சன்டிவிக்கு அடிமை ஆனார்கள். அதன் தொடர்ச்சியே மெட்டி ஒலி, திருமதி செல்வம், அண்ணாமலை, நாதஸ்வரம், தெய்வமகள் எல்லாம்.

பெப்ஸி உங்கள் சாய்ஸ், நிம்மதி உங்கள் சாய்ஸ் மிக பிரபலம். அதாவது சார் என்று ஆரம்பித்து மூச்சு விடாமல் பேசும் அரட்டை அரங்கம், பாப்பையா பட்டிமன்றம் சன்டிவியின் பலம்.
டாப் டென் மூவிஸ் சன்டிவி குழுவின் திரை ரசணைக்கு சான்று. கலைஞரின் கண்ணம்மா முதலிடம் பிடித்த நாளில் டாப் டென் மூவிஸ் சறுக்க தொடங்கியது.
சனி ஞாயிறு புதிய படங்கள் சன்டிவியின் சிறப்பு. தூரன் கந்தசாமியின் குரல் மெகா ஹிட் சூப்பர் ஹிட் என்று நிஜத்தை சொன்னது அந்த காலமே. இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று இருந்த வசனம் சங்கமம் படத்தின் போது திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்று மாறிப்போனது.
சன்டிவி குழுமத்தில் கேடிவி வந்தபின் சன்டிவி படங்கள் டல்.
சன் பிக்சர்ஸ் தொடங்கி மோசமான படங்களுக்கு சன்டிவி செய்த விளம்பரம் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. புதுசு கண்ணா புதுசு குங்குமம் விளம்பரம் போல் ஆனது சன் பிக்சர்ஸ் படங்கள்.
சன்டிவி புதியதாய் புதுமைகள் எதுவும் நிகழ்த்தவில்லை.பிற டிவிக்களின் பார்முலாக்களையே காப்பி அடித்தார்கள்.
சனிக்கிழமையும் நெடுந்தொடரை ஒளிபரப்பியது சன்டிவியின் மாபெரும் சறுக்கல்.
கலைஞர் டிவி வருகையின் போது சற்றே ஆட்டம் கண்ட சன்டிவி, விஜய்டிவி ஜீ தமிழ் வளர்ச்சியால் பத்தோடு பதினொற்றாகிவிட்டது. மக்களே முடிக்க சொன்ன தெய்வமகள் சீரியல் உதாரணம்.
சன்டிவியின் மாபெரும் சாதனை: அன்றும் இன்றும் பிக்சர் கிளாரிட்டி.
சன்டிவியின் சமீபத்திய சாதனை: ஒரு கபடி போட்டி மூலம் பிரபலமான கனெக்ஷன் ஸோவை காலி செய்தது.
No comments:
Post a Comment