ஜெயா
டீச்சர் 4ம்
வகுப்பு டீச்சர்.
ஜெயா டீச்சரின்
வகுப்பு என்றுமே இனிமையானது.
புதுமையான
முறையில் வகுப்பு நடத்துபவர்.
பள்ளிக்கூடத்தில்
ஆண் பெண் என பிரித்து கேள்வி
கேட்டு யார் அதிகம் விடை
சொல்கிறார்கள் ஆணா ?
பெண்ணா?
என்று போட்டி
முறையில் நடத்துபவர்.
சமயத்தில்
ஆண்களை கூட குழுவாக பிரித்து
மதிப்பு புள்ளிகள் வழங்குவது
கற்றலில் இனிமை.
படிப்பு
மட்டுமில்லாமல் விடுகதை
போட்டிகளும் உண்டு.
அதற்காக தங்க
மலரையும் சிறுவர் மலரையும்
தேடி அலைவோம். எங்கள்
ஊர் டீக்கடைகள் தினத்தந்தி
மட்டுமே வாங்குபவை.அத்தி
பூத்தார் போல் சிறுவர் மலர்
கிடைக்கும்.கிடைத்தால்
வெற்றியும் பெறலாம்.
என்னை
சுதந்திர தின விழாவில்
சுதந்திரம் பற்றி பேசவைத்தவர்.
நான் மனப்பாடம்
செய்து ஒப்பித்தித்தேன்.
நான்காம்
வகுப்பில் எங்களை தபால்தலை
சேகரிக்க சொல்லி ஊக்குவித்தவர்.இன்று
நான் வெளி நாட்டு பணம் சேகரிக்க
அவங்களும் ஒரு காரணம்.
ஊரில்
அவங்க வீட்டில் மட்டுமே டிவி
இருந்தது.ஞாயிற்றுக்கிழமை
சாயங்காலம் படம் பார்க்க ஊரே
திரண்டு செல்வோம்.ஜங்கிள்
புக் பார்க்க மாணவர்கள்
எல்லார் வீட்டிலும் அனுமதி
பெற்று பார்க்க வைத்தாங்க.புரிந்தும்
புரியாமலும் அன்று ஜங்கிள்
புக் பார்த்தோம்.
நான்காம்
வகுப்பில் காலில் ஏற்பட்ட
புண் காரணமாக கெட்வெல்
மருத்துவமனையில் நான் நான்கு
நாட்கள் சிகிச்சை
பெற்றேன்.மருத்துவமனையில்
நான் இருந்த நாளில் "மீரா
பாய் " பற்றிய
புத்தகத்தை கொடுத்து வாசிக்க
சொன்னாங்க.
ஜெயா
டீச்சர் மறைவுக்கு பின் "மீரா
பாய்" பற்றி
எங்கு கேள்வி பட்டாலும் ஜெயா
டீச்சர் ஞாபகம் வரும்.
நானும் மீரா
பாய் பற்றிய ஒரு புத்தகம்
வாங்கிவிட்டேன்.
ஜெயா
டீச்சரின் முழு பெயர் "ஜெயலட்சுமி
".
No comments:
Post a Comment