Saturday, 30 March 2013

எங்கள் நட்பு தொடர்கிறது.

31-03-09 அன்று நான் எழுதியது 

பரிதாபாத், தில்லி, ராயபுரம், வேளச்சேரி, திருச்சி, வில்லிவாக்கம், பூந்தமல்லி என பல இடங்களில் இருந்து நான்காம் ஆண்டை கடக்கிறது எங்கள் நட்பு.

ஒரு வருடமாய் கல்லூரி வாசத்தையும் 
நண்பர்கள் கூட்டத்தையும் 
மறந்திருந்த எனக்கு மீண்டும் 
நண்பர்கள் கூட்டத்தை தந்தது பெல்!

மனமுடைந்து போன எனக்கு 
மகிழ்ச்சியை தினம் தினம் தந்தது 
எங்கள் நட்பு!

கேண்டீனில் விஸ்தாரமாய் உட்கார்ந்து 
தூங்கி, காபி குடித்து தொடங்கிய 
எங்கள் நட்பு,

சேரில் ஷேர் ஆட்டோவாய் உயர்ந்தது 

நாங்கள் 8 பெரும் தனி அணி 
ஆனால் தனித்ததில்லை 

ஜீவா பூங்கா, உஸ்மான் சாலை 
அஞ்சப்பர் என எங்கள் நட்பு 
சிறகடித்தது  !

உச்சகட்டமாய் மாயாஜால், அபிராமி 
தொட்டது எங்கள் நட்பு 

ஊட்டி முதல் கோவா வரை,
நெல்லை முதல் பாண்டி வரை 
எங்கள் கனவு பயணம் 
இன்றும் செல்வோம் 
வேலை இல்லாமல் இருந்தால் 

விவாதத்தில் பொழுதை சுவாரஷ்யமாக்கி 
கொள்ளும் எங்கள் நட்பின் 
வயது பத்து மாதம் !

பத்து மாதத்தில் நான் 
கடந்து வந்த பாதையில் 
நட்பின் வாசம் 

பத்து மாதத்திற்கு பிறகு 
கருவறை விட்டு வெளிவரும் 
குழந்தையாய் நகருகிறேன் 

தாயின் அரவணைப்பாய் 
எங்கள் நட்பு தொடரும் 
என்ற நம்பிக்கையில

No comments:

Post a Comment