Sunday, 3 February 2013

சினிமாவை சினிமாவாய் பார்ப்பது

சினிமாவை சினிமாவாய் பார்க்க சிலரால் முடியவில்லை ஏன் ?
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதே சினிமாவில் அவர்களையே கிண்டல் செய்து கொள்வார்கள்.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் திரையில் தோன்றும் நடிகரே பாடுவதாய் மக்கள் நினைத்தனர்.சினிமா வில்லன் நடிகர் நிஜத்திலும் கொடூரமானவர் என்று நம்பினார்கள்.
சினிமா சிரிப்பு நடிகர் உண்மையிலும் கோமாளியாகவே இருப்பார்கள் என்றனர்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின் எல்லாமே மாறிவிட்டது. சினிமா கலைஞன் பேச்சை கேட்டு ஒட்டு போடுவதை கூட நிறுத்திவிட்டனர். காரணம் பெரும்பான்மையினர் சினிமாவை சினிமாவாய் பார்த்ததுதான்.

வடிவேலு முதன் முறையாக கதாநாயகனாக நடித்த புலிகேசி படம் மாபெரும் வெற்றி படம்.
அந்த படத்தில் எண்ணற்ற கருத்துகளை விதைத்திருந்தார் இயக்குனர் சிம்புதேவன்

நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை பார்த்து விட்டு கோக் / பெப்சி குடிப்பதை நிறுத்தினோம். (மிக்சிங்கு வேணும் அது இல்லாம முடியாதே!)

இதே சினிமாவில் தான் திரை துறையின் உயரிய கலைஞன் சிவாஜி கணேசனை கிண்டல் செய்கிறார்கள். இளைய திலகமும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.

தமிழ் படம் என்ற பெயரில் வெளிவந்த படத்தில் எத்தனை சினிமாவை கிண்டல் செய்து இருந்தார்கள். எல்லாருமே பல்லை இளித்து கொண்டு தானே பார்த்தோம்.

எல்லா சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அம்மாவை (அவர்கள் பெத்த தாயை ) மதித்தால் தமிழ் நாட்டில் முதியோர் இல்லத்திற்கு அவசியம் இல்லையே
ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை திரையரங்கோடு மறந்து விடுகிறார்கள். சினிமாவை சினிமாவாய் பார்கிறார்கள். சரி தானே

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலை எதிர்க்காத எல்லா தகப்பனும் தன் மகனை / மகளை ஓடி போக சம்மதிக்கிறான் என்று அர்த்தமா?

டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை சின்ன குழந்தைகள் பாடும் போது ரைம்ஸ் சொல்வதாக தானே நினைத்து கொள்கிறோம்!

சொந்த மகளை அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு கால்சீட் பார்ப்பவன் தான் சினிமா நடிகையின் தகப்பன்.

ஆகவே சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் பொது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் நண்பர்களே

உங்கள் சுற்றம் கண்டிப்பாய் உங்களை தவறாக நினைக்காது. உங்கள் சுற்றத்தில் யாராவது சினிமாவை பார்த்து தவறான அணுகுமுறையில் ஈடுபட்டால் பொடதியில் அடித்து புரியவைங்க.

No comments:

Post a Comment