திருநெல்வேலி ரயில் நிலையம், மாலை 6 மணி
நெல்லை விரைவு வண்டியின் S7 கோச் அருகே வந்தான் கார்த்திக். சார்ட்டை உற்று பார்க்க ஆரம்பித்தான் எத்தனை பெண்கள் அவன் வசம் என்று.
karthick 25M 57LB சுகன்யா 21F 63LB. இதை பார்த்த உடன் சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டான்.
சென்னையில் இருக்கும் நண்பன் தினேசை அலைபேசியில் அழைத்தான். மாப்ள என் கோச்ல எனக்கு அப்போசிட்ல ஒரு பொண்ணுல என்றான்.
பிகர் எப்படில என்றது எதிர்முனை. இன்னும் பாக்கல சார்ட்ல பார்த்தேன் சுகன்யானு பேரு என்றான். சரி ஓகே அல்வா வாங்கிட்டு வா என்றான் தினேஷ்
அல்வா வாங்கி வர பஸ் ஸ்டாண்ட் வரை வந்து விட்டு கையில் வார இதழுடன் ரயிலுக்கு வந்தான். பெர்த் 63க்கு சுகன்யா வந்திருந்தாள். மாநிறம், அழகான முகம். ஆங்கில நாவலை வாசித்து கொண்டிருந்தாள். கார்த்திக் சற்றே தடுமாறினான். அவள் நாவலில் ஆழ்ந்திருந்தாள். பேசுவாளா? மாட்டாளா ? என்று துடித்து கொண்டிருந்தான். மாலை சரிந்து இரவு படர்ந்து கொண்டிருந்தது. ரயில் நகர தொடங்கியது.
"அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கண் பார்த்து கந்தலாகி போன நேரம்" அலைபேசி அழைத்தது. என்னடா ட்ரைன் இன்னும் கிளம்பலையா என்றாள் கார்த்திக்கின் அம்மா. ட்ரைன் கிளம்பிருச்சு போன் பண்ண மறந்துட்டேன்மா.
கோவில்பட்டி வந்தபோது புத்தகத்தை விட்டு வெளியே வந்து எந்த ஸ்டேஷன் என்றாள். சுவர் விளம்பரத்தில் EMAR தெரிந்தது. கோவில்பட்டி என்றான். புன்னகையை பரிமாறிவிட்டு கார்த்திக், சுகன்யா என்று பரஸ்பரம் அறிமுகம் ஆனார்கள். மெக்கானிகல் எஞ்சினியர், தனியார் நிறுவன வேலை, மூன்றாண்டு சென்னை வாழ்கை என கார்த்திக் தன்னை பற்றி சொன்னான்.
அவளும் சொன்னாள். சாப்ட்வேர் எஞ்சினியர். சென்னைக்கு புதிது. மூன்று மாதங்களுக்கு முன் கல்லூரி முடித்து சென்னையில் ஒரு மாதமாய் பணிபுரிவதாய் சொன்னாள். மதுரையை கடந்தபின் சுகன்யா தூங்க தொடங்கினாள். கார்த்திக் தூங்கவில்லை, தூக்கம் வரவில்லை. பெண் வாசமே அறியாத சராசரி மெக்கானிக்கல் எஞ்சினியர். சொல்லாமலே போன சில காதல் தோல்விகள் அவனுக்கென உண்டு, பள்ளி கல்லூரி வாழ்வில். ஒரு பெண்ணுடன், அதுவும் அழகான பெண்ணுடன் பேசியதால் அவன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
காலையில் அவள் எழும்பூரில் இறங்கியபோது மனம் லேசாய் வலித்தது கார்த்திக்கிற்கு. உங்க ரூம் எங்க என்று கேட்டான். நுங்கம்பாக்கம் என்றாள்.
நண்பன் தினேசிடம் வந்து எல்லாவற்றையும் சொன்னான். சுகன்யா கொள்ளை அழகுல என்றான். மீண்டும் அவளை என்று பார்க்கலாம் என்று ஏங்கினான். அந்த தினமும் வந்தது. நுங்கம்பாக்கம் சென்றிருந்தான். மழை பெய்து வெறித்திருந்தது. ரயில் நிலையம் அருகில் இருந்த தெருவில் சந்தனத்தை கரைத்து கொட்டியதை போல சகதி. கார்த்திக் தன் சந்தன நிற பேன்ட்டை சேற்றிலிருந்து காப்பாற்ற கீழே குனிந்து மடக்கிவிட்டான் பேன்ட்டை. நிமிர்த்து பார்த்தான் செந்தாமரை அவன் முன்னே.
வயலட் நிற சுடிதாரில் வானத்தில் இருந்து குதித்த தேவதை போல வந்து கொண்டிருந்தாள் சுகன்யா. ஹாய் சொல்லி கொண்டார்கள். காபி சாப்பிட தீர்மானமானது. அடுத்த தெருவில் உட்கார்ந்து டீ சாப்பிடும் வகையில் இருந்த கடைக்கு அழைத்து சென்றாள் சுகன்யா.
வேலை எப்படி போகுது என்றாள் சுகன்யா. ம்ம் நல்ல போகுது என்றான். வாழ்கை எப்படி போகுது என்றான் கார்த்திக். தெரிச்சவங்க யாரும் இல்ல. என்னோட டீம்ல எல்லாருமே நார்த் இந்தியன்ஸ். ரொம்ப போரடிக்குது என்றாள்.
சரி ஓகே. போக போக பழகிடும். சென்னை லைப் செட் ஆயிடுச்சினா அப்புறம் எல்லாமே ஈஸியாயிடும்.
நடுவில் இருவரும் மௌனமாய் இருந்த தருணத்தில் காபி கோப்பைகள் காலியாகி இருந்தன. கார்த்திக்கிற்கு எழுந்திருக்க மனம் இல்லை. இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து பர்சை திறந்தான்.
சுகன்யா முன்னேறி இது அவள் முறை என்று கல்லாவில் காசை கொடுத்தாள். கார்த்திக்கை சுற்றி பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.
ரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கிய வேளையில் போன் நம்பர் கேட்கலாமா என்று யோசித்தான். அவள் கேட்டே விட்டாள். இவன் நம்பர் சொல்ல அவள் டயல் செய்து அவளது அலைபேசியில் இருந்து அழைத்தாள். "அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்தது இவன் அலைபேசி.
அதற்கு பின் நாட்களில் அவளை எப்போது அலைபேசியில் அழைக்கலாம் என்று துடித்தான் கார்த்திக்.
இரண்டு நாட்களுக்கு பின் எப்படி இருக்கிறாய்? என்று ஒரு குறுந்தகவல் அனுப்பினான். அடுத்த சில நிமிடங்களில் இவன் அலைபேசியில் முதன் முறையாக சுகன்யா கால்லிங் என்று வந்தது. உயர பறந்தான்.
உங்க மொபைல்ல மெசேஜ் ப்ரீ கிடையாதா ? என்றான். இல்ல என்றாள். மெசேஜ் ப்ரீயா இருந்தாதான் எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி எல்லா நண்பர்களோடும் டச் வச்சிக்க முடியும் என்றான் கார்த்திக்
"உலகத்திலேயே சிறந்த நண்பர்கள் நாம ரெண்டு பேர் தான்" என்கிற மெசேஜ் ஜ பத்து இருபது பேருக்கு பார்வேர்ட் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னோட மொபைல்ல கால் ரேட்ஸ் கம்மி. ப்ரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி அவங்க சிட்டுவேஷனுக்கு தகுந்த மாதிரி பேசி டச்ல இருக்கிறதுதான் பெஸ்ட்னு எனக்கு தோணுது என்றாள் சுகன்யா.
கார்த்திக்கால் எதுவும் பேசமுடியவில்லை, அவளின் பதிலை கேட்டு, ஏதேதோ பேசினார்கள். அன்றைய இரவு கார்த்திக்கிற்கு வித்தியாசமாய் இருந்தது.
புகைவண்டியில் உன்னை
பார்த்த போதே உன்
புகைப்படம் என் மனதில்
பதிந்துவிட்டது!
என்னுடன் நீ
தேநீர் அருந்திய போது
நீ என்
தேவதையாகி விட்டாய் !
அன்றைய உன் பிரிவு
என்னை காயபடுத்தியது!
உன்னுடன் பேசி முடித்த
இந்த கணம்
என்னுள் தேன்னாய்
இனிக்கிறது!
உன்னிடம் என் காதலை
சொல்ல போகும்
தருணத்திற்காக நான்
காத்திருக்கிறேன் !
அடிக்கடி சுகன்யாவுடன் பேசினான். அவன் நட்பு, அன்பான வார்த்தைகள், சூடான விவாதங்கள் அவளுக்கு பிடித்திருந்தது. சனி, ஞாயிறுகளில் சந்திப்பும் நடந்தது. நட்பை காதலாய் மாற்ற காத்திருந்தான் கார்த்திக்.
ஊருக்கு சென்றபோது பெருமாள்புரத்தில் இருக்கும் அவள் வீட்டுக்கு சென்றிருந்தான். சுகன்யாவின் அப்பா, அம்மா மற்றும் தங்கையிடம் பேசி மகிழ்ந்தான். அந்த குடும்பமே அவனுக்கு பிடித்திருந்தது. அவள் சம்மந்தபட்ட எல்லா விசயங்களும் அவனுக்கு பிடிக்கும் அந்த மனநிலைக்கு அவன் வந்துவிட்டான்.
கார்த்திக்கின் அலைபேசியில் சுகன்யாவுக்கென அழைப்பொலி "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" என்ற பாடல்.
கார்த்திக் ரூம் மேட் தினேஷ், இவனுள் கொஞ்ச நாளாக ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவன் உடல் மொழியிலே கண்டு கொண்டான். மாப்ளே ப்ரப்போஸ் பண்ணிருல, என்னைக்காவது ஒரு நாள் சந்தர்பத்தை தவற விட்டுட்டுடோமேன்னு நீ பீல் பண்ண கூடாது. எவ்வளவு சீக்கிரம் நீ ப்ரப்போஸ் பண்றயோ அவ்வளோ சீக்கிரம் நல்லது என்றான் தினேஷ்.
அவன் பேசிகொண்டிருக்கும் போதே கார்த்திக் சுகன்யாவிடம் காதலை சொல்லி சினிமாவுக்கு சென்று கொண்டிருந்தான் கனவுகளில்.
அலுவலக பணிகளில் சோர்வடைந்து திரும்பும் போது சுகன்யாவிடம் பேசினால் சுறுசுறுப்பாகி போனான் கார்த்திக். சுகன்யாவின் பிறந்த நாள் வந்தது. அவள் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். சாயங்காலம் சந்திப்பதாய் சொல்லி இருந்தாள் கார்த்திக்கிடம்.
கார்த்திக் காத்திருந்தான். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில். கையில் வாழ்த்து அட்டை, ரோஜா பூ, செவ்வக வடிவில் சற்றே பெரிய சாக்லேட். வாழ்த்து அட்டைக்குள் அவன் காதலை சொல்லும் கடிதம்.
இருபது நிமிட காத்திருப்புக்கு பின் சுகன்யா வந்தாள். அதுவரை எத்தனையோ முறை அவளிடம் பேசி இருந்தாலும் இப்போது கார்த்திக்கின் ரத்த நாளங்களில் ஒரு வித மாற்றம். தொண்டை அடைப்பது போல் இருந்தது. வியர்வை வேறு வழிந்து கொண்டிருந்தது.
அருகில் வந்து விட்டாள். கை குலுக்கி "மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே என்றான். சாக்லேட், கிரீடிங் கார்டு ஓகே, அது என்ன ரோஸ்? என்றாள்.
எப்படி சொல்றதுன்னு தெரியல "இட்ஸ் எ சர்ப்ரைஸ் பார் யு"இன்னைலிருந்து உன்ன சுகன் வா, போ ன்னு கூப்பிடலாம்னு இருக்கேன் என்றான்.
தாராளமா கூப்பிடுங்க என்றாள் சுகன்யா. என்னவோ தெரியல உன்னோட மட்டும் பேசணும், பழகனும், வாழணும்னு தோணுது என்றான் கார்த்திக்.
அவள் புன்னகைத்து கொண்டே ரோஜாவை வாங்கி கொண்டாள். இவர்கள் புன்னகையை பார்த்த வானமும் புன்னகை பூத்து இலேசாய் தூறல் போட்டது.
என்றும் சிநேகமுடன்
சு. பழனி செல்வகுமார்

No comments:
Post a Comment