அண்மையில் ஆனந்த விகடனில் ஒரு மாணவ பத்திரிக்கையாளர் நடிகர்
கார்த்தியிடம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்
பிற மொழி படத்தை தழுவி படம் எடுக்கும் தமிழ் திரை
உலகம் திருட்டு VCD யில் படம் பார்ப்பதை மட்டும் கண்டிக்கிறதே? இது தான் கேள்வி.
Copy rights வாங்காமல் காபி அடிப்பது தவறு. திருட்டு VCD யும் தவறு. பணம் போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளர் தெருவிலா போக முடியும் என்று
பதில் சொல்லி இருந்தார்.
தயாரிப்பாளர் தெருவுல போறதுக்கு காரணம் ரசிகர்கள் திருட்டு VCDல படம் பார்கிறது தான் என்பது எந்த வகையில் நியாயம் .
தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டபட்டாலும் தனது சம்பளத்தை குறைக்காத
நடிகர் நடிகைகள் காரணம் இல்லையா .?
ஒரு நடிகரின் படம் தோல்வி அடைந்தால் அவரின் சம்பளம் பாதியாய்
குறைக்கபடும் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தால் எத்தனை பேர்
தமிழ் சினிமாவில் நீடிப்பார்கள்.
அப்புறம் இயக்குனர் ஷங்கர் இடம் நீங்க என் Xeroxகாபி மாதிரி நண்பன்
படத்த எடுதீங்கனு கேட்டதற்கு அவரின் பதில்
3 idiots படத்த தமிழ் மக்களுக்கு காட்ட தான் Xerox எடுத்தேன். அதாவது சேவை மனப்பான்மையில்.
ராஜா, சேவை செய்யணும்னு நீ நினைச்சா அந்த படத்த நீயே தயாரிச்சு
இருக்கணும். இல்லேன்னா சம்பளம் வாங்காமல் இயக்கி இருக்கணும்.
ரெண்டுமே இல்லேன்னா இது எப்படி சேவை ஆகும்.
அவர்களிடம் ஒரு கேள்வி அதே trustukku உங்க சொந்த சம்பாத்தியதுல
எவ்வளவு ரூபா கொடுத்திருகீங்க?.
வருமான வரிக்காக எவ்வளவு நன்கொடை கொடுத்து எவ்வளவுக்கு பில்
வாங்கினீங்க ?
No comments:
Post a Comment