Friday, 31 August 2012

பசி


ரயிலில் அம்மா அப்பா
பசிக்குதுபார்த்த பசி
தீராது எதாவது
காசு போடுங்க என்று
பிச்சை கேட்கும் 
பிச்சைகாரனுக்கு உண்மையில் 
பசிக்கிறதா என்பதை
உணரமுடியவில்லை.

அவன் கையை பற்றி
இழுத்து போய் கடையில்
உணவு வாங்கி தர
நேரமும் இல்லை!

அவசர அலுவலில்
இருந்தாலும் 10௦ மணிக்கு
அடிவயிறு காலை
உணவு உண்ணாததை
நினைவு கூறுகிறது!

ருசி இல்லா உணவை 
தின்று பழகிய நாக்கு
அம்மாவின் கை மணத்திற்காக
பசித்து கிடக்கிறது ! 

மனசு  த்து போகும் போது
வயிறும் பசிக்க 
மறந்து விடுகிறது!  

மாத கடைசியில்  அறைக்கு   
வரும் நண்பன் நன்றாக 
சாப்பிட வேண்டும் 
என்பதற்காக, எனக்கு
பசிக்கல ரெண்டு  புரோட்டா
போதும் நீ சாப்பிடு  
என்று சொல்லும் போது,
என்னனு தெரியல   மாப்ள 
எனக்கும்  இன்னைக்கு வயறு
கம்முனு இருக்கு என
அவன் பதில் கூறும் போது
பசி கூட நட்பை பறைசாற்றுகிறது !

1 comment:

  1. /*மனசு மறத்து போகும் போது*/ மரத்துப் போகும் போது?

    சற்று முயற்சித்தால் படைப்பின் உரைநடைத் தன்மை குறைந்து கவிதைத் தன்மை கூடும். படைப்பின் வீச்சு அதிகரிக்கும்.

    ஒன்று நிச்சயம். சுயமாக சிந்தித்து அனுபவத்தைப் பதிவு செய்யும் ஆர்வம் இருக்கிறது. அதற்கான திறமையும் இருக்கிறது. முயற்சி.. இன்னும் தேவை..அதுவும் கை கூடும். வாழ்த்துக்கள் பழனி..

    ReplyDelete