எங்கள் ஊரின் சின்ன சின்ன
(பெரிய்ய்ய்ய ) சந்தோசங்கள்
(1)தெருவில் (திரை
) படம்
கல்யாணம் மற்றும் விசேச தினங்களுக்கு நண்பர்கள் உறவினர்களை
சந்தோஷ படுத்த தெருவில் டிவி வாடகைக்கு எடுத்து படம் போடுவது வழக்கம்.
டிவி என்பது அரிதான காலத்தில் படம் பார்க்க ஊரே திரண்டிருக்கும். பொதுவாக முதல் படம் பக்தி படம், அடுத்தது குடும்ப படம்,
3 வது படம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க.
சரஸ்வதி சபதம்,திருவிளையாடல், கந்தன் கருணை தவிர வேறு படங்கள் கிடையாதுமுதல் படத்திற்கு. “அம்மன்” படம் வந்த பின் வேறு நல்ல
பக்தி படங்கள் வர தொடங்கியது. டிவியும் எல்லா வீட்டிலும் வந்து விட்டது.
கரகாட்டகாரன், சின்ன தம்பி,
பொன்னுமணி, கும்பக்கரை தங்கையா 2 வது படம்.
3 & 4 வது படம் பெரும்பாலும் கார்த்திக் படம்.
4
படம் தொடர்ந்து பார்ப்பது சாதனை தான்.
நான் இரு முறை முயன்று தோல்வியை தழுவி இருக்கிறேன்.பீடி
சுற்றும் தாய் குலங்களால் தொடர்ந்து
4 வது படமும் பார்க்க முடியும்
.
(2)காணும் பொங்கல் / மாட்டு பொங்கல்
காணும்பொங்கல் அல்லது மாட்டு பொங்கல் தினத்தில் தோட்டத்தில் /
வயலில் முன்னோர்களை நினைத்து பொங்கல் விடுவது வழக்கம்.
(3)பொங்கல் விளையாட்டு போட்டிகள்
பொங்கலுக்கு மறுநாள் விளையாட்டு போட்டிகள் நடப்பது தமிழ்
நாட்டின் வழக்கம். இந்த போட்டிகளில் பெண்களுக்கும் குடும்ப
தலைவிகளுக்கும் போட்டி
வைத்து பரிசளிப்பது பாராட்ட தகுந்த விஷயம்.
(4) கோவில் கோடை கலை இரவு
கோவில் கொடைகளில் முதல் நாள் இரவு
கலை இரவாகும் .
கரகாட்டம், பாட்டு கச்சேரி அதிகாலை 4 மணி வரை களை கட்டும்.
கரகாட்டத்தில் அதிக விரசம் இருப்பதால் விழ குழுவினரும் இன்றைய இளைஞர்களும் கரகாட்டத்தை தடை செய்து விட்டனர்.
(5)கார்த்திகை தீப திருநாள்
கார்த்திகை தீப திருநாள் அன்று எல்லாரும் சூந்து கொளுத்துவது
வழக்கம். பருத்தி மாரை சேர்த்து கட்டும்
சூந்தில் இருந்து டயரை கொளுத்தும் சூந்துக்கு மாறினால் பெரிய பையனாக அங்கீகாரம்
கிடைக்கும் டயரை கொளுத்தி
கையில் பிடித்து கொண்டே கணியான் பாறை வரை செல்வது
சிறுவர்களின் தைரியம்.
(6) வடக்கத்தி அம்மன்
வடக்கத்தி அம்மன் திருவிழா,
அம்மன் கோவிலுக்கு வடக்கே வயலுக்குள் இருந்து பூஜை செய்து
மஞ்சள் நீராடத்துடன் நடைபெறும்.
இந்த விழாவில் மைத்துனர் மைத்துனிகள் மீது மஞ்ச தண்ணி
ஊத்துவது வாடிக்கை.இந்து மழை வேண்டி ஆண்டு தோறும் நடக்கும்
திருவிழா .
No comments:
Post a Comment