Friday, 3 May 2019

மகளதிகாரம் 2

தூக்கத்தில் உதடு சுழிக்கிறாள்
உதடு குவிக்கிறாள்.
அலுப்பு முறிக்கிறாள்.
கண்ணை இறுக்குகிறாள்.
ஆயிரம் ஜாலங்கள்
அத்தனையும் அழகு!

விழித்திருக்கையில்
ஏதேதோ பேசுகிறாள்
அவளுக்கு மட்டும்
தெரிந்த மொழியில்!

தூக்கம் என் கண்ணை
சொருகும் நேரத்திலும்
ஏதாவது பேசி புன்னகைத்து
தூக்கம் கலைக்கிறார்கள்!

அவளை தூக்கிக் கொண்டு
நடக்க சொல்கிறாள்.
நடந்தால் தூங்கி போகிறாள்!!!

No comments:

Post a Comment