Thursday, 25 August 2016

எப்படி தொடங்கியது இந்த பழக்கம்.


கத்தரிக்காய் விற்ற பணம் என்று அப்பா டைரியில் புத்தம் புதிதாய் வைத்திருந்த
2 ரூபாய் காரணமா?
பழைய பவுடர் டின்னில் அம்மா பாதுகாத்து வைத்த இந்திரா காந்தி 5 ரூபாய் நாணயம்
காரணமா?
தெரியவில்லை.
பணம் கொடுத்து பணம் வாங்குகிறான் என்று கிண்டல் செய்த நண்பர்கள் பின்னர்
எனக்காய் நோட்டுகளையும் நாணயங்களையும் தந்தனர்.
அது உன்னோட "ஹாபி" என்று  முதுகில் தட்டி கொடுத்தாள் என் மனைவி.

தற்போது 150 நாடுகளின் நோட்டுகள் மொத்தமாய் 180கு மேல் சேர்த்து விட்டேன்.

இன்னும் சிற்சில நாட்டு நோட்டுகள் மட்டுமே பாக்கி .

என்னிடம் உள்ள பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகள் பின்வரும் நாடுகளை சேர்ந்தவை.

1. சிங்கப்பூர், 2. ப்ருனே , 3. ஆஸ்திரேலியா 4 நியூஸிலாந்து 5 மெக்ஸிகோ
6 நைஜிரியா 7 பப்புவா நியூ கினி 8 வியட்நாம் 9 டொமினிக்கா 10 ருமேனியா
11 பராகுவே


பின்வரும் நாட்டு சிறப்புகள் 

1. யூகோஸ்லாவியா டினாரா
யூகோஸ்லாவியா தற்போது போஸ்னியா, குரோஷியா , கொசோவோ, மாசிடோனியா , மொன்டிகுரோ ,செர்பியா, ஸ்லோவேனியா ஆகிய சுதந்திர நாடுகளாக மாறிவிட்டது.

2. செக்கோஸ்லாவியா குருனா
செக்கோஸ்லாவியா தற்போது செக் குடியரசு மற்றும் ஸ்லாவ்ஸ்கியா நாடுகளாக மாறிவிட்டது.

3. பியபிரா பவுண்ட்
வடக்கு நைஜீரியா பகுதியான பியப்ராவை உலக நாடுகள் அங்கீகரிக்காததால் நைஜீரியா உடன் இணைத்து கொள்ளப்பட்டது.

4. சிலோன்
சிலோன் தற்போது ஆங்கிலத்தில் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டுவிட்டது.

5. சையர்  சையர்
சையர்  தற்போது காங்கோ குடியரசு என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது.

6. பர்மா க்யாட்
பர்மா தற்போது மியான்மார் என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது.


  
பின்வரும் நாடுகளின் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை.

1. இத்தாலி லிரா
இத்தாலியில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

2. போர்ச்சுகல் escudo
போர்ச்சுகலில்  தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

3. லாட்வியா லிட்டா
லாட்வியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

4. லிதுவேனியா லிட்டா
லிதுவேனியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

5. சைப்ரஸ் பவுண்ட்
சைப்ரஸ்ல் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

6.எஸ்டோனியா க்ரோனி
எஸ்டோனியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

7.கினி பிசாவு
கினி பிசாவுவில் தற்போது மேற்கு ஆப்பிரிக்க CFA Franc புழக்கத்தில் உள்ளது

8. பெல்ஜியம் Franc
பெல்ஜியமில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

No comments:

Post a Comment