Tuesday, 4 June 2013

மனதோடு ....!!!

மழையை ரசிக்க 
முடியவில்லை 
என் மனதில் மழையாய் 
பெய்தவளை நினைக்கையில் !

சாலையில் சேறடித்து 
செல்லும் கார்காரனை 
திட்ட மனம் வரவில்லை 
மனதோடு காதல் மழை!

மழை வெறித்த பின்னும்
குடை பிடித்துக் கொண்டிருந்தேன்
என்னை நனைக்கிறது
அவளின் காதல் முகம்!

மேகம் கலைந்து
வானம் வெறுமையாகி விட்டது
இவள் மட்டும் கனவுகளாய்
என்னில் நிறைந்திருக்கிறாள் !!

மனதோடு ....!!!

No comments:

Post a Comment